ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சோமேட்டோ தங்களது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளன.
இந்தியாவில் ஸ்விக்கி, சோமேட்டோ போன்ற நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் மட்டும் இன்றி சிறு நகரங்களிலும் தங்காளது சேவையை வழங்கி வருகின்றன. பிடித்த உணவுகளை வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிட முடியும் என்பதால் இந்த சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களும் இதன்மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.
இந்நிலையில் உணவுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக இந்த நிறுவனங்கள் தங்களது பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்தியுள்ளன. நேற்று சோமேட்டோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்திய நிலையில், இன்று ஸ்விக்கியும் தனது கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முன்னதாக சோமேட்டோவின் பிளாட்பார்ம் கட்டணம் ரூ. 6 ஆகவும் ஸ்விக்கியின் கட்டணம் ரூ. 7 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டண உயர்வு தற்காலிகமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இரு நிறுவனங்களும் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.