அப்பாடா ஒருவழியா விடா முயற்சி அப்டேட் வந்துருச்சு..!

 விடாமுயற்சி படத்தின் டப்பிங் பணி தொடங்கிவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  




அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேணி இயக்கத்தில் விடா முயற்சி படம் உருவாகி வருகிறது. படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக அர்ஜூனும், முக்கிய கதாபாத்திரத்தில் ஆரவும் நடத்துள்ளனர். படத்தின் பெயர் அறிவிக்கப்பட்ட பின்னர் படம் குறித்த அப்டேட் எதுவும் இல்லாமல் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர். இந்தநிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தகட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. 




அதன் ஒருபகுதியாக படத்துக்கான டப்பிங் பணி தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இந்த படம் இந்தாண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் பின்னணி பணிகள் இன்னும் முழுமை பெறாததால் அடுத்தாண்டு பொங்கலுக்கு தான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் வஎளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடுவார்கள் என கருதப்படுகிறது.