”இதுதான் இந்திய ஆர்மியின் முகம்”.. மாஸாக வெளியானது சிவகார்த்திகேயனின் அமரன் ட்ரெய்லர்

 சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 




கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அமரன். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. இந்தப்படம், போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 


இந்தப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியானது. அதில் முதல் காட்சியே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என முகுந்த் வரதராஜன் அவரது மகளிடம் கூறுவது போல தொடங்கி சிவகார்த்திகேயனாக மாறுவதில் வந்து முடிகிறது. ட்ரெய்லரில் ஆர்மி என்பது ஜாப் இல்லை என் லைப் என சிவகார்த்திகேயன் சொல்வதும், ராணுவ வீரரின் மனைவியாக இருப்பது பெருமை என சாய் பல்லவி சொல்வதும் ரசிகர்களை கவர்ந்தது. 



இதில் ராணுவ உடையில் சிவகார்த்திகேயன் மிரட்டலாக காணப்படுகிறார். சாய் பல்லவி மீதான காதல், நாட்டு பற்று உள்ளிட்ட அனைத்தையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளனர். பான் இந்தியா படமாக அமரன் வெளியாக உள்ளதால் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.