பாலைவனத்தில் சிக்கிய இளம்பெண்கள் ஊபரில் ஓட்டக சவாரியை புக்கிங் செய்து பயணம் செய்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது ஊபர், ஓலா, ரேபிட்டோ போன்ற நிறுவனங்கள் கார், ஆட்டோ, பைக் டேக்ஸி போன்ற சேவைகளை வழங்கி வருகின்றன. அவர்களது செயலியில் நாம் இருக்கும் இடத்தில் இருந்தே புக்கிங் செய்தால் நமது இடத்துக்கே வந்து செல்ல வேண்டிய இடத்துக்கு அழைத்து அழைத்து செல்வார்கள். இவர்களது செயலியில் ஜிபிஎஸ் வசதி, சென்று கொண்டிருக்கும் வழிகளை மற்றவர்களுக்கு பகிரும் வசதி உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகிறது. அதில் வாகனம் பழுதாகில் பாலை வனத்தில் சிக்கிய இளம்பெண்கள் ஊபரில் ஒட்டக சவாரியை புக் செய்து பயணித்துள்ளார். அந்த வீடியோவில் 2 இளம்பெண்கள் வாகனம் பழுதாகி பாலை வனத்தில் சிக்கி கொள்கின்றனர்.
உடனடியாக தனது மொபைல் போனில் ஊபர் செயலியில் சென்று பார்க்கிறார். ஒட்டக சவாரி உள்ளது என காட்டியுள்ளது. உடனடியாக அதை புக் செய்கிறார். சிறிது நேரத்தில் அங்கு வரும் ஒருவர் தான் ஒட்டக ஓட்டுநர் என கூறி அவர்களை அழைத்து செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.